Advertisement

Responsive Advertisement

நீலையூர் சுதாவின் "கிடுகுவீடு" நூல் அறிமுகவிழா


 (குமாரசிங்கம்) 
 நீலையூர் சுதாவின்  "கிடுகுவீடு" நூல்  அறிமுகவிழா  17/12 /2022  அன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்  கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்  வ.கனகசிங்கம் தலைமையில்  மட்/மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு இராமகிஷ்ன உதவி முகாமையாளர் சுவாமி சுராச்சிதானந்தர் அவர்களின்  ஆசீர் வாதத்துடன் ஆராம்பித்து வைக்கப்பட்டது .



 இந்நிகழ்வில் கிராமிய வீதி   அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  கோவிந்தன் கருனாகரன் அவர்களும்  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க  அதிபர் திரு. க.கருனாகரன் அவர்களும்  மற்றும்  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களான திரு சீ.யோகேஷ்வர














ன்,   திரு.கி.துரைராசசிங்கம்,  ஜனாப் அலிசாகிர் மௌலானா மற்றும் முன்னாள்  மாகாணசபை உறிப்பினர்களான திரு .இரா துரைரெத்தினம் , திரு.பிரசன்னா , திரு.பிரசாந்தன் ஆகியோரும்  கலந்து  நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வில் திரு கி.கிருபைராசா அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரால் தலைமையுரை ஆற்றப்பட்டது.  மேலும் தென்கிழக்குப்  பல்கலைக்கழக சிரேஷ்ர விரிவுரையாளர் கலாநிதி கா,கோமதிராஜ் நூலாசிரியர் பற்றிய உரையையும் மட்/சிவாநந்த வித்தியாலய ஆசிரியர்  திரு.கி குமாரசிங்கம் நூல் அறிமுக உரையையும், ஓய்வு நிலை அதிபர் திருமதி சிவமணி.நற்குணசிங்கம் நூல் நயவுரையையும் ஆற்றினார்கள். அத்துடன் மகாஜனகல்லூரி மாணவர்கது நடனநிகழ்வும் அதிதிகள் உரையும் இடம்பெற்று நூல் அறிமுகவிழா இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments