நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை வழங்கும் நெறிமுறை மாற்றப்பட்டுள்ளதாக (பகுதி II வினாத்தாள் முதலிலும் பகுதி I பின்பும்) பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். எனவே மாணவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கு தனியான பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கு தனியான பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: