Home » » வடக்கு கிழக்கில் அதி உச்ச அதிகாரப் பகிர்வு - சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு!

வடக்கு கிழக்கில் அதி உச்ச அதிகாரப் பகிர்வு - சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு!


ஒரே நேரத்தில் மூன்று விடையங்கள் நடைபெற வேண்டும் என்பதும் எமது சிந்தனையாகும். இதனை முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அதிபரும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டும் இருகின்றார்கள்.

இந்த மூன்று விடயங்களும், அதிபர் தானாகவே சொல்லியிருக்கின்ற காலக்கெடு. அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 75 வது ஆண்டு நிறைவை அடுத்தவருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடுவதற்கு முன்னதாக செய்து முடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றிருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் போதைப்பொருள் அதிகரிப்பு

வடக்கு கிழக்கில் அதி உச்ச அதிகாரப் பகிர்வு - சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு! | Sri Lanka Tna Sumanthiran Batticalo Press Meet

மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு இன்று பெரியகல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“தற்போதைய காலகட்டத்தில சுகாதாரததில் பல்வேறுபட்ட தேவைகள் நிவர்த்தி செய்யப்படாமலிருக்கின்றன. ஆனாலும் சுகாதாரத்துறையில் வேலை செய்பவர்கள் மிகுந்த அற்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதானது முக்கியமான பிரச்சினை என அனைவருக்கும் தெரியவந்திருக்கின்றது. எமது இளைஞர் யுவதிளை போதை என்கின்ற அரக்கனிடத்திலிருந்து காப்பாற்றுகின்ற பொறுப்பு அனைவரிடத்திலும் உண்டு.

வடகிழக்கிலே அதி உச்ச அதிகாரப் பகிர்வு

வடக்கு கிழக்கில் அதி உச்ச அதிகாரப் பகிர்வு - சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு! | Sri Lanka Tna Sumanthiran Batticalo Press Meet

போதை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் வழிப்புணர்வு செயற்பாடுகளை நாம் யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.

அதனூடாக நாடகம் ஒன்றையும் நடித்து மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டும், மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து தாம்போதையிலிருந்து விலகியிருப்போம் என சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்று வருகின்றது.

இதனை வடகிழக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொள்ளவுள்ளோம். வடகிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலரும் உதவுவதற்கு முன்வந்துள்ளார்கள்.

போதைப் பொருள் விநியோகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாதிருந்தாலும், அதன் பாவனைகளை எமது இளைஞர் யுவதிகளிடமிருந்தும் மாணவர்களைத் தடுப்பத்தில் எமக்கு பாரிய பங்கு இருக்கின்றது. இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

அதிபரை சந்தித்தமை தொடர்பாக எமது அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலே வடகிழக்கிலே அதி உச்ச அதிகாரப் பகிர்வு, உள்ளக சுய நிருணய அடிப்படையில் ஒரு சமஷ்ட்டிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

என்பதை தெட்டத் தெழிவாகச் சொல்லியிருக்கின்றோம். இதனைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றவர்களுக்கு புரியும். தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை தட்டி எழுப்ப முடியாது எனவே நாம் வெளிப்படையாக இதனை வெளிப்படுத்தித்தான் பகிரங்கப்படுத்தித்தான் அதிபருடன் நாம் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கின்றோம்.

இவ்விடயங்கள் தான் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் அதிபருடன் நடைபெறுகின்ற பேச்சுவார்தைகளிலெல்லாம் இதனைத்தான் முன்வைத்து நாம் பேச்சு நடத்துகிறோம்.


இப்பேச்சுவார்த்தையில் காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம், எஞ்சியிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்பு, விடயங்கள். இந்நிலையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசியலமைப்பிலே, சட்டத்திலே இருக்கின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.  புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட அடிப்படையில் ஒரு நிரந்தத் தீர்வு காணப்படல் வேண்டும். இவை ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதும் எமது சிந்தனையாகும்.  இதனை முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அதிபரும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டும் இருகின்றார்கள். இந்த மூன்று விடயங்களும், அதிபர் தானாகவே சொல்லியிருக்கின்ற காலக்கெடு அதவது இலங்கை சுதந்திரமடைந்து 75 வது ஆண்டு நிறைவை அடுத்தவருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடுவதற்கு முன்னதாக செய்து முடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றிருக்கின்றோம்.  அந்தக் காலகட்டத்திற்குள்ளேயே ஒரு இணக்கப்பாடு, ஒரு முடிவு ஏற்பட வேண்டும். என்பதை நாங்கள் நிற்பந்தமாகச் சொல்லியிருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்திற்குள்ளேயே ஒரு இணக்கப்பாடு, ஒரு முடிவு ஏற்பட வேண்டும். என்பதை நாங்கள் நிற்பந்தமாகச் சொல்லியிருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.  இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் விளையாட்டுக்கழ உறுப்பினர்கள், இரத்த நன்கொடையாளர்கள், மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |