Home » » அரச ஊழியர்களுக்கு பேரிடி - பணியிலிருந்து நீக்கப்படப்போகும் பல இலட்சம் ஊழியர்கள்

அரச ஊழியர்களுக்கு பேரிடி - பணியிலிருந்து நீக்கப்படப்போகும் பல இலட்சம் ஊழியர்கள்

 


அரச சேவையிலுள்ள 15 லட்சம் அரசு ஊழியர்களை 12 லட்சமாகக் குறைத்தால் பொது சேவைகள் இடரின்றி இயங்கும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு

அரச ஊழியர்களுக்கு பேரிடி - பணியிலிருந்து நீக்கப்படப்போகும் பல இலட்சம் ஊழியர்கள் | Sri Lanka Government Employee Government Salary

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |