மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 75 பேர் விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகளில் நேற்று நண்பகல் முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 கிலோ 148 கிராம் மாவா, 9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
0 comments: