களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த நபரை சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments: