Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு

 


வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்படுகின்றன. தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா கலந்துகொள்கிறார். வரவேற்புரையினை திருமதி சி.குமாரதேவியும் வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும் நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்த வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர்  பொ.நாகேந்திரம் நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொள்வார். 

நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’-எஸ்.எஸ்.வாசன், ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’-கி.உதயகுமார், ‘திருவாசகம்’-திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றுவர்.நன்றியுரையை வைத்தியகலாநிதி திருமதி.விமலா விஷ்வநாதன் நிகழ்த்துவார்.மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெறும்.

Post a Comment

0 Comments