Home » » மட்டக்களப்பு பிரபல பாடசாலையின் மாணவன் நஞ்சு விதை அருந்தி த ற் கொ லை

மட்டக்களப்பு பிரபல பாடசாலையின் மாணவன் நஞ்சு விதை அருந்தி த ற் கொ லை

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வார் வீதி மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் நஞ்சு விதையருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வார் வீதி வசிக்கும்  சுதாகரன் வர்ஷணன் (20) என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார். 

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் பெற்றோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு செல்வதற்கு மறுத்திருந்த நிலையில் பெற்றோர் மாத்திரம் கலந்து கொள்ள சென்ற போது பாடசாலையின் அதிபர் மாணவனையும் அழைத்து வரும் படி கூறியதையடுத்து வீட்டுக்கு சென்று தந்தை அழைத்துச்சென்றபோது பாடசாலை வகுப்பறையில் மாணவன் வாந்தி எடுத்ததனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறித்த மாணவன் பாடசாலைக்கு அழைத்து செல்லும் போது ஏற்கனவே நச்சு விதையருந்தியிருந்தமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |