கொழும்பின் பிரபல தேசிய பாடசாலையின் உடற்பயிற்சி மையத்தில் வைத்து 15 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவரை நாவுல காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
நாவுல காவல் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் கடந்த 6 ஆம் திகதி மாணவனுக்கு எதிராக குற்றத்தை செய்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவனின் தாயாரால் முறைப்பாடு
மாணவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த காவல்துறை அதிகாரியின் கையடக்கத் தொலைபேசியில் மது போத்தலுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க விரும்புவதாக கூறி மாணவனிடம் அவரின் வீட்டிற்கு செல்லும் வழியை அதிகாரி கேட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் வீட்டுக்கு வர வேண்டாம் என மாணவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாடசாலையின் உடற்பயிற்சி கூடம்
இதனையடுத்து குறித்த மாணவன் பாடசாலையின் உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, சார்ஜன்ட் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
0 comments: