Advertisement

Responsive Advertisement

மின்சார உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் ! குளிர் காலத்தில் மின்சாரம் இன்றி தவிக்கும் உக்ரைன் மக்கள் !

 


ரஷ்யா எரிசக்தியைக் குறிவைக்கும் பயங்கரவாதப் போக்கைக் கையாள்வதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனின் எரிசக்திக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை அடுத்து சுமார் 4.5 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக செலென்ஸ்கி கூறினார்.

அண்மைய வாரங்களில், உக்ரைனின் அணுமின் ஆலைகள் மீது ரஷ்யா பெரிய அளவிலான ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது.

நகரில் உள்ள மின்சாரக் கட்டமைப்புகளையும் ரஷ்யத் துருப்பினர் குறிவைத்துத் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறினார்.

அதன் விளைவாகச் சிக்கனமான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்தும்படி உக்ரைனிய அரசாங்கம் மக்களைக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைனிய வலுசக்தி அமைப்புகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.

முக்கிய தெற்கு நகரான கெர்சோனில் இருந்து ரஷ்ய துருப்புகள் உத்தியோகபூர்வமாக வாபஸ் பெறும் நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போர்க்களத்தில் மோசமான பின்னடைவை சந்தித்த நிலையில் போர் நிலைகளுக்கு அப்பால் இருக்கும் நகரங்களில் உள்ள மின்சார நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments