Home »
எமது பகுதிச் செய்திகள்
» இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து !
இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து !
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த நோபேர்ட் நிலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனை பின் புறமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற பேருந்தினை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
அதன் போது பேருந்தின் சாரதி மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் சாரதியையும் , பேருந்தினையும் இளவாலை பொலிசாரிடம் ஊரவர்கள் ஒப்படைத்தனர்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: