Home » » தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு !

தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு !

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன.


பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |