Home » » மக்கள் மீது சுமத்தப்பட உள்ள ​மேலும் 04 வரிகள்…!

மக்கள் மீது சுமத்தப்பட உள்ள ​மேலும் 04 வரிகள்…!

 


நாட்டுக்காக இதையும் சுமப்பதற்க்கு தயாராகுங்கள் 

மக்கள் மீது சுமத்தப்பட உள்ள ​மேலும் 04 வரிகள்…!

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் ஆண்டு நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2056 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.

அந்தப் பரிந்துரைகளுக்கமைய, புதிய வரிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |