Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் : தேர்தல் ஆணைக்குழு !

 


இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.


புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments