2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன இணைந்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பரிந்துரையின்படி, இருபதுக்கு 20 உலகக் கிண்ண இலங்கை குழாமுக்கு நேற்று (13) அளித்துள்ளதாகவும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை, அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட குழாம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதுடன், ஒக்டோபர் முதல் வாரத்தில் பல்லேகலவில் நடைபெறும் பயிற்சி முகாமின் பின்னர், போட்டிக்கான அணி புறப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை பங்கேற்கவுள்ளது
0 comments: