Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வெள்ளக் கல்லு மலைப்பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு



மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளக் கல்லு மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குசலானமலை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய சித்திரவேல் சிறிகந்தராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிலிப்பியர் சேனை பகுதிக்கு சென்று வருவதாக கூறி நேற்று காலை சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை குறித்த வெள்ளகல்லு மலைப்பகுதிகளில் உள்ள நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்ட பரிசோதனைக்காக சடலம் செங்கலடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினரிடம் கையளிப்பதற்கான அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments