15-09-2022.*,
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
கல்வி பொது தராதர பத்திர உயர் தர பரீட்சையினை ஒத்திவைக்குமாறு அரசியல்வாதிகள் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கற்பித்தல் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருகின்ற நிலையில் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
0 comments: