தொடர்புடைய ஏனைய மதத்தவர்கள் இல்லையா? கிழக்கு மாகாணத்திற்கென நூறு வீதம் சிங்களவர்களினால் மாத்திரம் உருவாக்கப்பட்ட செயலணியும், தொல்பொருள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களும் எதனைச் செய்ய முனைகின்றார்கள்?
கிழக்கு மாகாணத்திலே சிங்களப் புராதனச் சின்னங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்;கின்றார்களா? ஏனைய மதத்தவர்களும் அந்தச் செயலணிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தச் செயலணி கலைக்கப்பட வேண்டும். அந்தச் செயலணிக்குள் ஏனைய மதத்தவர்களோ, ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர் குழாமிற்குள் ஏனைய மத மாணவர்களோ உள்வாங்கப்பட்டால் அங்கிருப்பது எந்த மதத்தைச் சார்ந்த, எந்த மதத்தினர் வழிபட்ட புராதனப் பொருட்கள் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புகின்றோம். நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தமிழருக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம், நீங்கள் குறிப்பிட்ட தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், கடந்த அமைச்சரவையிலே இருந்த இனவாதிகளுள் முக்கியமான இனவாதி நீங்களாகவே இருப்பீர்கள்.
இந்த நாட்டை அழித்த சில இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக கே.எம்.பி.ராஜரெட்ண, ஆர்ஜி.சேனநாயக்க, சிறிலால் மத்தியு போன்ற மூன்று மிகவும் துவேசமான இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மூன்று இனவாதிகளையும் ஒன்று திரட்டி ஒரே ஆளாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் தற்போது பேசும் போது சுற்றிவர இருந்தவர்களுக்கு முன்னுரிமை, நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே நடைபெற்றவைகளுக்கு நீங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றீர்கள்.
எனவே, தொடர்புடைய அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏழாம் நூற்றாண்டிலே பாடல் பெற்ற இந்தத் திருக்கோணேஸ்வரம் முன்னூற்று நாற்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்டதை 1971ம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், பதினெட்டு ஏக்கருக்கு உட்பட்ட காணி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கின்றது. அந்தக் கோயில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாடல் பெற்ற தளம் இராஜகோபுரம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கான இராஜகோபுரம் அமைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் இந்த நாட்டைப் பற்றிப் படித்து விட்டுத்தான் வருகின்றார்கள். இந்த நாட்டிலே சோழர் பல்லவ காலத்து ஆட்சியைப் பற்றி அறிந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அவர்கள் திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லும் போது வழியிலே கடைகளை வைத்து இந்து சமயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிபடுவதற்கும், ஆராய்வதற்கும், சுற்றலாப் பயணிகள் மேலும், மேலும் வருவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
0 comments: