Home » » மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போக பாவனைக்கு 4000 தொன் பசளை !

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போக பாவனைக்கு 4000 தொன் பசளை !

 


மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் நேற்று (22) சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேசினர். விவசாய நடவடிக்கைகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகள் மற்றும் சவால்களை எடுத்து விளக்கிய விவசாயிகள், இவற்றை நிவர்த்திக்க அவசர முயற்சிகளை செய்யுமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

இச்சந்திப்பில் அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாலாயிரம் தொன் பசளையை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபரில் செய்கை பண்ணப்படவுள்ள பெரும்போகச் செய்கைகளுக்கு இந்தப்பசளைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், உரிய வேளைக்கான நீர்ப்பாசனம், கால்நடையாளர்களால் உரிமை கோரப்படும் மேய்ச்சல்தரை போன்ற விடயங்களுக்கு இருதரப்பினருடனும் கலந்துரையாடி முடிவெடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |