05-09-2022.*,
இன்று காலை தொடக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இன்று காலை 09.30 மணி தொடக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இன்று (05) வரை 03 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதுவரையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments