Advertisement

Responsive Advertisement

அமைதி போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான படையினரை களமிறக்குவது குறித்து அரசாங்கத்திற்கு பீல்ட் மார்ஷல் எச்சரிக்கை!

 


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியமை தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.


அது குறித்து பொன்சேகாவின் முகநூல் பதிவு பின்வருமாறு.

நிராயுதபாணியான அமைதியான பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாக்கி விரட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்களை ஈடுபடுத்துவது ஒரு நாட்டின் ஜனநாயகம் வேலை செய்யவில்லை என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.



கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைதியான மற்றும் அகிம்சை வழியிலான போராட்டத்தின் மீது இவ்வாறு கும்பலைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார். இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளை களமிறக்குகின்றார்.

மே 9 தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை முழு நாடும் பார்த்தது. திறமையற்ற, பயனற்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள், தீவிரமான மக்கள் எழுச்சிக்குத் தேவையான இடத்தை உருவாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காது. சர்வதேச ஆதரவு இன்றியமையாத ஒரு நேரத்தில், இத்தகைய தேவையற்ற அடக்குமுறை எதிர்வினைகளின் விளைவு சந்தேகத்திற்கு இடமின்றி முழு நாட்டையும் ஒடுக்கும்.

Post a Comment

0 Comments