01-08-2022.*,, ,
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலால் முதலாவது நபர் உயிரிழந்தார்.
22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த நிலையில், நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
0 Comments