Home » » தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்கள் பின்வருமாறு

தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்கள் பின்வருமாறு

 


தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்கள் பின்வருமாறு

Note – இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனின் REGISTER என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்..

உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும்..அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும்..

1. அனைத்து தனிப்பட்ட வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது..

2. இந்த நடைமுறை Ceypetco மற்றும் IOC ஆகிய எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் செல்லுபடியாகும்..

3. உங்கள் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • இறுதி இலக்கம் 0,1,2 – திங்கள் மற்றும் வியாழன்
  • இறுதி இலக்கம் 3,4,5 – செவ்வாய் மற்றும் வெள்ளி
  • இறுதி இலக்கம் 6,7,8,9 – புதன்,சனி,ஞாயிறு

4. பதிவு செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் உங்களுக்கான பெட்ரோல் quota தயார்படுத்தப்பட்டதும் உங்களுக்கு அறிவிக்கப்படும்..

5. உங்கள் மொபைல் இலக்கத்துக்கு பெட்ரோல் தயாரானதும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்..

6.Ceypetco நிலையங்கள் இந்த ஆன்லைன் fuel pass system நடைமுறைக்கு வந்த பின்னரே பெட்ரோலை வழங்கும்.. அதுவரை யாரும் வரிசையில் நிற்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

7. அது வரையிலும் IOC பெட்ரோல் நிலையங்களில் வழமையான முறையில் உங்களால் பெட்ரோலை பெற்றுக் கொள்ள முடியும்.

8.ஒரு NIC அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு fuel pass மட்டுமே பெற்று கொள்ளலாம்..அதாவது  ஒருவர் ஒரு வாகனத்தை மட்டுமே தனக்கு கீழ் பதிவு செய்து கொள்ள முடியும்…

உதாரணம் ஆக  உங்கள் வீட்டில் மூன்று வாகனங்கள் இருந்தால் வீட்டில் உள்ள ஒருவரின் கீழ் மூன்று வாகனங்களையும் பதிவு செய்ய முடியாது.. வீட்டில் உள்ள மூன்று உறுப்பினர்களுக்கு கீழ் தனி தனியே பதிவு செய்ய முடியும்..

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |