முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியமை தொடர்பில் அதிபர் மாளிகையில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது, " கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பெரிதாக இருக்கும் என கோட்டாபய எண்ணியிருக்கவில்லை. அதனை இராணுவத்தினர் சமாளித்து விடுவார்கள் என்று நம்பியிருந்தார்.
கையில் கிடைத்த நான்கு பைகளுடன் தப்பியோடிய கோட்டாபய
ஆனால் நடந்தது வேறு. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாசலை உடைக்க தொடங்கினார்கள். அதனை பின்னரே மாளிகையில் இருந்து வெளியேற கோட்டபாய திட்டமிட்டார்.
கையில் கிடைத்த நான்கு பைகளுடன் கோட்டாபய ராஜபக்ச அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை ஊடாக, கொழும்பு துறைமுகம் சென்றடைந்த கோட்டாபய, அங்கிருந்து கப்பல்கள் மூலம் தப்பிச் சென்றார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9 போராட்டம்
கடந்த 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அதிபர் மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி வரை தலைமறைவாக இருந்த கோட்டாபய 13 ஆம் திகதி மாலைதீவு சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கோட்டபாய ராஜபக்ச, தப்பியோடியமை தொடர்பில் தென்னிலங்கையில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கடற்படை வீரர் தற்போது வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிடத்தக்கது
0 Comments