Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி பதவி ரணிலுக்கு! பிரதமர் யார்..

 


இலங்கையின் அடுத்த பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று  தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்த பிரதமர் யார்?

ஜனாதிபதி பதவி ரணிலுக்கு! பிரதமர் யார்.. | Prime Minister Dinesh Gunawardena

இதனையடுத்து  அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் குறித்த பதவிக்கு தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில் தனது பதவி விலகலை அறிவித்திருந்தார். 

அதனையடுத்த பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து நிரந்த ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு இன்றையதினம் புதிய ஜனாதிபதிக்கான தெரிவு இடம்பெற்றது. 

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிப்பெற்று அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,   அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுகின்றது. 

Post a Comment

0 Comments