பாரிய போராட்டம்
சிறிலங்காவின் அதிபர் செயலகத்திற்கு முன்னால் தற்பொழுது சத்தியாக்கிரக போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
காலி முகத்திடல் போராட்ட குழுவினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டாபயவை தொடர்ந்து ரணிலும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து போராடி வந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் புதிய அதிபருக்கான தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் ரணில் எந்த பதவிகளையும் ஏற்க கூடாது என்றும் பதவி விலக வேண்டும் என்றும் சிறிலங்காவின் அதிபர் செயலகத்திற்கு முன்னால் தற்பொழுது பாரிய போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் பாரிய திரையில் நாடாளுமன்ற வாக்கெடுப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments