கடந்த சனிக்கிழமை 9ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பேரணியை தடுப்பது தொடர்பில், புதன்கிழமை 6ஆம் திகதியன்று, கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தேசிய பாதுகாப்பு பேரவை கூடி ஆராய்ந்தது.
இதன்போது, போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்கான பாதுகாப்பு பலப்படுத்தல் குறித்து ஆராயப்பட்டது.
போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்னரேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பான இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டன.
வகுக்கப்பட்ட திட்டம்
இந்த போராட்டத்தை தடுப்பதற்காக சுமார் 10ஆயிரம் படையினரையும் பொலிஸ்காரர்களையும் ஈடுபடுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரை பணிகளில் ஈடுபடுத்தும் திட்டமும் வகுக்கப்பட்டது. எனினும் இறுதிநேரத்தில் மக்கள் சக்தியால் இந்த அனைத்து ஏற்பாடுகளும் சிதைக்கப்பட்டன.
இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒரு சக்திவாய்ந்த வெளிப்புற மூலத்தின் வலுவான ஆதரவைக் தாம் கொண்டிருப்பதாகவும், எனவே எதிர்காலத்தைப் பற்றி வெளிப்படையான கவலை இல்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும் அந்த உரிமைக்கோரலில் உண்மைத்தன்மை இல்லையென்று கொழும்பின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
0 comments: