Advertisement

Responsive Advertisement

மொட்டு கட்சி மூன்றாக பிளவு? தொடரும் இரகசிய பேச்சுவார்த்தைகள்

 


கொழும்பு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாகியுள்ள நிலையில், பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற குழு மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் பெரும்பாலான குழுவில் 40இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர்.

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் அதில் கெஹலிய மற்றும் மஹிந்தானந்த ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தனி தனியாக கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதுடன் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர். ஆனால் இவ் மூன்று குழுக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இனியும் பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இல்லை என்பது விஷேட அம்சமாகும்.

Post a Comment

0 Comments