Home » » தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல்

தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல்

 


கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரிய நூலகம்

தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல் | Prime Minister S House In Flames

ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்ததது. இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன.

இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக தடவை பிரதமர்

தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல் | Prime Minister S House In Flames

நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த கொழும்பு அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை. உத்தியோகபூர்வ பணிகளுக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |