Home » » அரச மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய - அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு

அரச மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய - அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு

 


இலங்கையின் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றி அவரது இராஜினாமாவை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதையடுத்து, நீண்டகாலத் தீர்வுகளைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்ல - தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

அரச மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய - அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு | Us Urges Sri Lanka Leaders To Work Quickly

அமெரிக்காவின் எச்சரிக்கை

நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தையோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்கத்தையும் விரைவாகச் செயற்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எதிர்ப்பாளர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கும் அதேவேளை, சனிக்கிழமையன்று ஒரு கும்பல் ராஜபக்சவின் இல்லத்தை தாக்கிய வன்முறையை விமர்சித்தது.

அரச மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய - அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு | Us Urges Sri Lanka Leaders To Work Quickly

இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உள்ளது, மேலும் போராட்டம் தொடர்பான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் முழுமையாக விசாரணை செய்யவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |