Home » » இராஜினாமா செய்யாமல் பதில் நியமனம் செய்தால் என்ன நடக்கும்.?

இராஜினாமா செய்யாமல் பதில் நியமனம் செய்தால் என்ன நடக்கும்.?

 



ஒரு மாத கதையெல்லாம் இங்கில்லை.. 

அரசியலமைப்பின் உறுப்புரை 37(1) இது பற்றி கூறுகின்றது. 

ஜனாதிபதி தனது பணிகளை புரிவதற்கு தற்காலிகமாக இயலாதுள்ளார் எனவோ அல்லது வெளிநாடு செல்வதாகவோ அவர் கருதினால் தனது பணிகளை பிரதமருக்கு கையளிக்கலாம். பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப் படுவார். அதேநேரம் அமைச்சர் ஒருவரை பிரதமராக நியமிக்கலாம். 

இந்த பதில் நியமனம் ஜனாதிபதி மீண்டும் வரும் வரை அமுலில் இருக்கும்.. அல்லது ஜனாதிபதி பதவி விலகும் வரை அமுலில் இருக்கும். 

-----

இராஜினாமாவும் இல்லை, பதில் நியமனமும் இல்லை. ஜனாதிபதி நாட்டிலும் இல்லை,

இப்போது என்ன நடக்கும்..?

--------

இப்போதுதான் இலங்கையில் பிரதம நீதியரசர் தலையிடுவார்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை  37(2) இந்த நிலையில் நடைமுறைக்கு வரும்.

அதாவது, 

ஜனாதிபதி தனது பணிகளை புரிவதற்கு தற்காலிகமாக இயலாதுள்ளார் எனவும் உறுப்புரை 37(1) இன் கீழ் பதில் நியமனம் செய்யாது விட்டுள்ளரெனவும், பிரதம நீதியரசர் சபாநாயகரை கலந்தாலோசித்த பின்னர் அபிப்பிராயப்பட்டால், பிரதம நீதியரசர் தனது அபிப்பிராயத்தை சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்.

அதன் படி நாட்டின் பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்பதுடன், அமைச்சரவை அமைச்சர் ஒருவரை பிரதமராகவும் நியமிப்பார்.

இப்போது ஜனாதிபதி திரும்பி வரும் வரை அல்லது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை பிரதமர் தான் ஜனாதிபதி. அந்த ஜனாதிபதி நியமிப்பவர்தான் புதிய பிரதமர்.  


ஒரு மாத கதையெல்லாம் இங்கில்லை. 


(ஏ.எஸ்.எம். நளீஜ் LL.B)

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |