Advertisement

Responsive Advertisement

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிக்ஞை: வெளியாகியுள்ள தகவல்

 பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு திரும்பபெறப்படும் அறிகுறிகள் தென்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் திடீர் அறிவிப்பு - பிரதமரின் அறிவிப்பை மறுத்துள்ளதா?

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிக்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் அதனை வெளியிடுவார் என ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மாத்திரமே ஜனாதிபதி வெளியிடும் அறிக்கைகளாக கருதப்படும் என ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

இதனை பார்க்கும் போது ஜனாதிபதி தனது பதவி விலகும் முடிவை பிரதமருக்கு இன்று முற்பகல் அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கூறியதை மறுத்துள்ளதை போல் தெரிகிறது.

அப்படியில்லை என்றால், பதவி விலக தீர்மானித்துள்ள ஜனாதிபதி ஒருவர் அவசரமாக இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகம் தற்போது இயங்கவில்லை என்பதே இதற்கு காரணம்.

அத்துடன் இதனை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் செயலாளரையோ ஏனைய உயர் அதிகாரிகளையோ தொடர்புக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

இதனடிப்படையில், இது ஜனாதிபதி பதவி விலகும் தீர்மானத்தை திரும்பபெறும் முதல் சமிக்ஞையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

முடிவுகளை திரும்ப பெற்று கோட்டாபய உலக சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிக்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் இதுவரை எடுத்த பல முடிவுகளை திரும்ப பெற்றுள்ள ஜனாதிபதி என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை.

இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை, அவ்வப்போது நடைமுறைப்படுத்திய அவசர காலச்சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்ற பல முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திரும்ப பெற்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட வரலாறு உள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தனது முடிவுகளை திரும்ப பெற்று வரலாற்று சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில்,  ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிக்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி பதவி விலகுவதற்கு நல்ல நேரத்தை பார்ப்பதற்கான தேவையில்லை. அரச நிர்வாகம் தொடர்பாக அவருக்கு இருந்த தார்மீக அதிகாரம் ஏற்கனவே அவரிடம் இருந்து பிடிங்கி எறிப்பட்டு விட்டது.

Post a Comment

0 Comments