Home » » நாடு திரும்பினார் கோட்டாபய?

நாடு திரும்பினார் கோட்டாபய?

 


கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டதை அடுத்து, கப்பலில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கரை திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி அருகிலுள்ள நாட்டிற்குச் சென்றுவிட்டார் என்று முன்னர் தெரிவித்திருந்தார்.

பின்னர் தான் தவறுதலாக அவ்வாறு கூறியதாக தெரிவித்து தனது அறிக்கையை மீளப் பெற்றிருந்தார்.

அத்தோடு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அதனையடுத்து அவர், இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, கப்பலில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கரை திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |