Home » » இலங்கைக்கு கிடைக்கவுள்ள அவசர உதவி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள அவசர உதவி


அவசர உதவி வழங்க ஜப்பான் முன்வரவு

இலங்கை மக்களுக்கான மருந்து மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கான மருந்து மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் ஆகியவற்றின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள அவசர உதவி | Japan Provide Support Sri Lanka Economic Crisis

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்றுவெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அதன் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க உதவியாக இருக்கும் என நம்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமை குறித்து அவதானித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |