Advertisement

Responsive Advertisement

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

 


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நாளை முதல்  எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments