புதிய இணைப்பு
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜப்பானின் முன்னாள் பிரதமர்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மேற்கு நகரமான நாராவில் இடம்பெற்ற பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதே குறித்த துப்பாக்கி சுட்டுச் சம்பவம் இடம் பெற்றதாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுயநினைவு அற்ற நிலையில் முன்னாள் பிரதமர்
குறித்த சம்பவம் தொடர்பில் அங்கிருந்த நிருபர் கூறுகையில்.. துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டதாகவும் பின்னர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே குருதி வடிந்த நிலையில் சரிந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் 11.30 மணியளவில் (02:30 GMT) இடம் பெற்றதாகவும் முன்னாள் பிரதமருக்கு சுயநினைவு இருக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சுட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments