Advertisement

Responsive Advertisement

ரணிலும் கோட்டாபயவும் உடன் பதவி விலகுங்கள்! ஆயிரக் கணக்கில் திரண்ட மாணவர்கள்

 


சற்று முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments