இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த 369 அத்தியாவசிய பொருட்களை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments: