Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

 


சிகரட் பாவனையை மக்கள் மத்தியில் இல்லாதொழிக்கும் நோக்கில் மட்டக்களப்பு நகரில் சிகரட் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் தலைமையில் இன்று காலை இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு (Photos)

சுற்றிவளைக்கப்பட்ட கடைகள்  

சுற்றிவளைப்பில் சுமார் 15 கடைகள் சுற்றிவளைக்கப்பட்டு சிகரட் தேடுதல்கள் நடத்தப்பட்டதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தேநீர் சாலை உட்பட நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையங்களும் சோதனையிடப்பட்டன.

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு (Photos)

விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

சிகரட் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், சிகரட் விற்பனை செய்யாத கடைகளுக்கு நற்சான்றிதழ் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் விடுதிக்கு முன்னாலுள்ள விடுதியிருந்து பெருமளவான சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு (Photos)

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு (Photos)


Post a Comment

0 Comments