Advertisement

Responsive Advertisement

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை வழங்கல் மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பரீட்சைக்கு தேவையான கண்காணிப்பு பணிக்குழாமினரும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும், ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments