Advertisement

Responsive Advertisement

அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் : பிரேத பரிசோதனையில் திருப்பம்

 


மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.


இதில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யவில்லை என்றும், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவ பிரதேசத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து எம்.பி கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பின்னர் பொதுமக்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்ததால் அவர் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நீதித்துறை வைத்திய அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக பாரியளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.யின் மரணம் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாக இருந்தது, ஆனால் அவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை" என்று தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments