பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம், அமைச்சரவையில் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அக்கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள சஜித்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதித்த நிபந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமருக்கு ஒத்துழைப்போம் என்றும் சஜித் பிரேமதாச பிரதமருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுட்டுள்ளார்.
0 comments: