அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதால் உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, உரத்தை இறக்குமதி செய்து தனியாரால் அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், உர இறக்குமதி விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க முன்வந்துள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.
0 Comments