Advertisement

Responsive Advertisement

அலரி மாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட அமைதியின்மை

 


அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், அலரி மாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில்,  அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக போராட்டக் களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில் வீதியோரத்தில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தற்போது நடுவீதியை மறித்து  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Gallery 

Post a Comment

0 Comments