(ரூத் ருத்ரா)
கொழும்பு -காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந் நிலையில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் காலி முகத்திடலில் கலந்து கொண்டோர் பலர் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யவேண்டும்.வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்பாட்டத்தில் அருட் தந்தையர்களான கிங்சிலி, குனே,நதிர,சுஜிதர் சிவநாயகம்,பிரின்சன்,றிச்சட் சொருபன்.ஜெகதாஸ் ஆகியோர்களும் மேலும் வடக்கு கிழக்கில் உள்ள அருட் தந்தையர்கள் மற்றும் தென் பகுதியிலுள்ள அருட் தந்தையர்களும் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ்ச உள்ளிட்ட அனைத்து ராஜபஷ்சாக்களும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதான கோரிக்கையாகவுள்ளது.இன்றும் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments