எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் அரச தலைவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
0 Comments