பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்த நாடாளுமன்ற அமர்வு வரையில் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
தற்போதைக்கு போராட்டத்தை விலக்கிக்கொள்வதாகவும், அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே 17ம் திகதி நடைபெறும் போது, மீண்டும் திரும்ப வரவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நேற்று முதல் பத்தமுல்ல தியத உயனவுக்கு அருகில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க நேற்றும் இன்றும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
எனினும், தம்மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த பகுதியில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதேவேளை, இன்றும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற அமர்வை, மே 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்தார்.
0 comments: