Advertisement

Responsive Advertisement

அலரி மாளிகைக்கு முன்னால் இருந்து தமிழர்களுக்கு வந்த அழைப்பு! களத்தில் ஒற்றைத் தமிழன்

 


அரசியல் என்னும் சாக்கடையே எனக்கு வேண்டாம், ஒட்டு மொத்த மக்களுக்காகவும் தான் நான் போராட வந்திருக்கின்றேன் என அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் பார்வையாளராக இருந்த இந்த தமிழ் முதியவர்  தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அலரி மாளிகை போராட்டக் களத்தில் இருக்கும் ஒரு தமிழர் இவர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து தமிழர்களையும் அவர் போராட்டக் களத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், போராட்டங்களிற்கு வந்து குடித்து விட்டு புகைப்படம் எடுத்துச் செல்வதை விட தமிழனாக துணிந்து போராட்டத்தில் ஈடுபடுமாறும் தமிழ் இளைஞர்களிடம் இதன்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.       

Post a Comment

0 Comments