ஒமிக்ரோன் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய உருமாற்றத்திற்கு “XE” வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த ‘XE’ வைரஸ் முதன்முதலில் கடந்த ஜனவரி 19ஆம் திகதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உருமாறிய வைரஸ் ஒமிக்ரோன் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமிக்ரோன் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘XE’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் மராட்டிய மாநிலம் மும்பையில் ‘XE’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது.
தென்னாபிரிக்காவில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2ஆம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘XE’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.
0 Comments