ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம், உணவை பெற்றுக்கொள்ளும் கூடாரம் என்பன அடங்கும்.
ஆர்ப்பாட்டகாரர்கள் தற்காலிக கழிவறைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கோட்டா கோ கிராமம் என பெயரிட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் நேற்று முன்தினம் முற்பகல் முதல் மழை, வெயில் பாராது தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
0 comments: